Saturday, November 15, 2008

பிளாஸ்டிக் பூக்கள்

வேர்களின் தகிப்புக்கு
நீர் கேட்ட செடிகளை
ஊர்கடத்தி,
பற்பல வண்ணங்குலைந்து
அறிவியலின் ஆக்கதில் பூக்கும்
'பிளாஸ்டிக்' செடிகளை
நுகர்வோர் அதிகம்..

வளர்த்த ஆசைக்கு
மலராத வருத்தத்தின்
அதிர்வுகளாய் வீட்டுள்,
அழகு பெயர வாங்கி
ஆற்றாமை தணிப்பர் சிலர்..

பருவத்தடை பழக்கி
உலர்வையும், உதிர்வையும் மீறி
நிரந்திர பச்சை நுரைக்கும்
இலைகளின் நுனியில் கனக்கும்,
காற்றில் முணகாத ஏக்கங்கள்..

மேசையில்
கண்ணாடி அலமாரியில்
தொலைக்காட்சியின் தலையில்
தேன் தாது நறுமணம்
அளவளாமல் விரியும்
இயற்கையை கடந்த இதழ்கள்...

வெளிறா நிறம் கொண்டும்
பூப்புணர் வண்டோ
மென்விரல் மாதரோ
வருடாமையால்,
வெறுமையே பூரிக்கும்
'பிளாஸ்டிக்' பூக்களின் புன்னைகை..

- ஆதி

http://adhiyin.blogspot.com/

நீண்ட நாள் கழித்து, ஒரு நிரை வயிறு வேட்டை........

2 comments:

Ashok said...

more than te kavithai, i liked "neendaa naal kalithu, oru vayiru niraya vaettai".. unngaloda tamil la oru fire irukku na.. y don u try ur own kavithai or katturai or watever be it?? try pannungaa.. pls..

ஆதி said...

இந்த என் கவிதையை உங்கள் தளத்தில் கண்டதில் மிக உவப்படைந்தேன்...

"நீண்ட நாள் கழித்து, ஒரு நிறை வ்வயிறு வேட்டை" எனும் வரி இக்கவிதைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்...



நன்றி பொன்மாறன்