Sunday, October 19, 2008

மண்டை ஓடுகள் விற்பனைக்கு!!!

கரிசல் காடுகளில் இது

கந்தகங்களின் அறுவடை காலம்...

சிதறி கிடக்கும்

மண்டை ஓடுகளில்..

சிறிதோ.. பெரிதோ..

நம் மகனின் காலுக்கேற்ப

வாங்கி செல்வோம்...

நல்ல உதை பந்தாகலாம்...


அன்பு மனைவியின்

பாவாடை நாடாவிற்கோ

உள் பாடி ஊக்கு தைப்பதற்கோ

இருக்கவே இருக்கிறது

நம் சகோதரனின்

நரம்புகள் விற்பனைக்கு..

.

நம் வீட்டு கர்ப்பபையில்

குண்டுகள் வெடிக்காதவரை...

எவன் செத்தால் நமெக்கென்ன..?

.

வா நண்பா..,

நமெக்கென இருக்கவே இருக்கிறது..

''''சாராய கடையும்

ஷகீலா படமும்.. ''''

- முடிவிலி

http://mudivili-dainfinity.blogspot.com/

Valentine's Day விதைத்த (க)விதை !

மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம்...

நடைபாதை ஆவாரம்பூவை நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு,
நகராது போன நிமிடங்களைப் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டு,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை.....

அதில் மட்டும் வாழ்ந்தால் போதும்,
உனக்கும் எனக்குமான காதல் !

- லக்ஷ்மி சகாம்பரி
http://www.sahambari.blogspot.com/

வளமான தமிழகத்துக்கு வழியே இல்லையா?????

தண்ணீர் தர மறுக்கும் அண்டை நாடு.....!!
கண்ணீரோடு காத்திருக்கும்தஞ்சை நாடு......!!!

கன்னட தமிழ் பேதம் வளர்க்கும்
வல்லிய கயமைக் கூட்டம்....!!!
வெந்நீரை வேரில் ஊற்றும்
தந்நல அரசியல் கூட்டம்....!!!

இலவசமாய் எலிவிஷமானலும்
பரவசமாய் ஏற்கும் மக்கள்..!!!!
கலவரத்தால் தேர்தல் வெல்லும்
வன்முறை அரசியல்வியாதிகள்....!!!

சல்லாபமே சந்நியாசமாய்
எண்ணும் ஆன்மீக நரகல்கள்............!!!!
உயர்ந்தோங்கிய சம்பளம் உல்லாசத்துக்கே
என்றே எண்ணும் இளையோர் கூட்டம்...!!!!

விளையாட்டாய் பல விபரீதங்களை
இணைக்கும் இணையம்.....!!!!
நான்கு கட்சிக்கும் சாமரம் வீச
நான்கு தொலைக்காட்சிகள்...!!!!

வீட்டு அரிசி நிலை எவ்வாறானாலும்
அரசி பார்க்காவிடில் தூங்கா மகளிர்...!!!
இங்கே உண்டு பெண்டிருக்கு சமவுரிமை
பப்(Pub)களில் இருவராய் மட்டுமே அனுமதி...!!!
இதற்கா கேட்டோம் பெண்ணுரிமை....!!!!???

அவதார உருவங்களாய் வேடம் போடும்
அரசியல் சாணக்கியர், அகங்கார அம்மையார் நடுவே
அரிதார புருடர்களின் நாற்காலி கனவுகள்...!!!!

சிக்கித் தவித்து சின்னாபின்னமான கப்பல் போல்
ஒதுங்க வழியின்றி உட்காரும் மக்கள்....!!!!

ஐந்து வருடம் ஒருமுறை உள்ளெ வெளியே
ஆடி ரசிக்கும் மக்கள்,
அடுத்த ஐந்தாண்டு நமக்கே நமக்கு என
சிந்தித்து செ(பு)யல்படும் ஆட்சியாளர்கள்...!?????!!

வருமானம் வந்தால், தன்மானம் வேண்டாமெனும்
லஞ்சப்பேய் கொண்டாடும் நயவஞ்சோர்...!!
எத்தனை தான் சொல்வது, எதனை தான் விடுவது...??!!
எல்லா விதைகளும் விடமாய் மாறி
உணவே மருந்தான உன்னத காலம் போய்
உணவே விடமாய் உயிரை எடுக்கிறது...!!!!

- சுரேஷ்
http://sureshdmadurai.blogspot.com/

முடியலத்துவம்

இடைப்பட

குறுகுறு நடந்து,

இட்டும் தொட்டும்

சிறுகை நீட்டி

கேட்கிறது குழந்தை...

பிச்சை!!!!!

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=22313678&tid=2592850432148481202